Thursday 15 March 2012

கல்வெட்டு;-3.(சிலாசாஸனம்;-மூந்நு)




சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலின் கி.பி.17ம் நூற்றாண்டின் சரித்திரம்...


(சோட்டாணிக்கரை பகவதிஅம்மெ அம்பல ஏ.டி.நூற்றாண்டு சரித்ரா....)


கல்வெட்டு2ல் கூறப்பட்ட ஆதிவாசிகளின் காலத்திற்குப் பின்னர்..அக்காட்டில் "வேட்டுவக்குல மக்கள்",வாழ்ந்து வந்தனர்.
அவர்களில் "கண்ணப்பன்",என்பவன் ,மக்களிடம் வழிப்பறிக் கொள்ளைகள் செய்து வாழ்ந்து வந்தான்.அவனது மனைவி ஒருப் பெண் குழந்தையை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்துவிட்டாள்.கண்ணப்பன் அந்தக் பெண் குழந்தைக்கு "பவழம்",என்று பெயரிட்டான்.தன் மகளை தன் உயிரெனக் காத்து வளர்த்துவந்தான்.


அவன் தினமும் இரவு நேரங்களில்,ஒரு பசுமாட்டினை திருடிவந்து,அதை பகவதிஅம்மனுக்கு பலியிட்டு படையல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
ஓர்நாள்,இரவு பகவதிக்கு பலியிட ஒரு பசுங்கன்று ஒன்றை திருடி வந்தான்.அந்தக் பசுங்கன்றினைக் கண்ட அவனது மகள் பவழம்..,அதோடு ஆசையாக விளையாடத்தொடங்கினாள்.அதைக் கண்ட கண்ணப்பன் அந்தக் கன்றினை பலியிடாமல், தன் மகளுக்கே பரிசாகாக் கொடுத்துவிட்டான்.


காலச்சக்கரம் சுழன்றுக்கொண்டே போனது.
ஓர்நாள் கண்ணப்பனின் மகள் பவழம் நோய்வாய்பட்டு இறந்துப் போனாள்.மகளது பிரிவினால் கண்ணப்பன் பித்தனைப் போல் ஆகினான்.மக்களிடம் வழிப்பறி செய்வதை விட்டுவிட்டான்.நல்லவனாக மனசாட்சி உள்ளவனாக வாழத்தொடங்கினான்.அவனது மகள் வளர்த்த அந்த கன்னுக்குட்டியை மிகவும் பாசத்தோடு வளர்த்துவந்தான்.
ஓர்நாள் அவன் உறங்கிக்கொண்டிருந்தபோது,


"மகனே!!,பகவதி நான் இந்த பூமியில் அவதரித்துவிட்டேன்...
உன் பாவங்கள் நீக்கப்பட்டன.உன்னை கலிகாலத்தில் சரித்திரம் கூறும் அளவிற்கு உன் வாழ்கை சரித்திரம் அமையும்...",
என்று ஓர் குரல் கேட்டது.


சட்டெனக் கண் விழித்த கண்ணப்பனை ஒரு ஜோதிவடிவமான ஒளிச்சுடர் அவன் வீட்டு பின் புறம் அழத்து சென்று சட்டென மறைந்தது.
அவனது மகளது நினைவாக அவன் வளர்த்துவந்த பசுங்கன்று மண்டியிட்டு படுத்த நிலையில்,அங்கு கல்சிலையாக மாறியிருந்தது.
அதைக் கண்ட கண்ணப்பன் ,,
"என்ட அம்மே...நாராயாணா....என்ட தேவீ நாராயானா..",
என ஆனந்தக்கண்ணீருடன் கதறி அழுது,கைவணங்கி நின்றான்...
காலப்போக்கில்,கண்ணப்பனின் காலமும் மெல்ல மறைந்தது.
கண்ணப்பனது வாழ்க்கை வேட்டுவக்குல மக்கள் மனதில் சரித்திரமாகப் பதிந்துப் போனது.



No comments:

Post a Comment