Thursday 29 March 2012

மனதின் ஆற்றல்.......... (பாகம்:1)


நடக்கப்போகும்ஒருசில விஷயங்களை,சிலர் தெய்வத்தின்முன்னிலையில் அருள்வாக்காகவும்,ப்ரஸன்னம் என்னும் மலையாளதேசத்துக் கலை வழியாகவும் கூறுகின்றனர்,.
ஒன்றுமே தெரியாதவன்,திடீரென நடக்கப்போகும் நிகழ்வுகளை கூறுகிறான்.
அப்போது அவனை சிலர்
"அவன் ஏதோ மாயவேலை செய்கிறான்...",
என்கின்றனர்.
"அவனுக்கு தெய்வத்தின் அருள் கிடைத்துவிட்டது",
என்கிறனர் ஆன்மீகவாதிகள்.

"அதெல்லாம் ஏதும்மில்லை.அவன் மூளைக்கு ,ஈ.எஸ்.பி E.S.P.,எனும்(அறிவியல் விளக்கப்படி, அதி விசேஷமான இந்திரிய ஞான உணர்வு" extra sensory perception),ஆற்றல் வந்துள்ளது",

என ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள்.
இதில் எதுதான் உண்மை?
என்னதான் நடக்கிறது இந்த உலகத்தில்?


நம்நாட்டில் யோகிகள்,ஞானிகள்,மஹான்கள்,
ரிஷிகள்,அவதாரப்புருஷர்கள்,ஆகியோர் தங்களுடைய யோக ஆற்றல்களால் தங்களுக்குள்ளாக இருக்கும் இந்த ஞான சக்தியை தெரிந்துக்கொண்டும்,அதைப் பயன்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த அதிசய ஞானசக்தியால் நடக்கூடியதை முன்கூட்டியே உணர்ந்துக்கொள்ள முடியும்.வரக்கூடிய ஒருசில ஆபத்துக்களை ஞானிகள் தெரிந்துக்கொண்டு,எச்சரித்தும் இருக்கிறார்கள்.
இத்தைகய சக்தியைத்தான் மேலைநாட்டினரும்,நம்நாட்டு விஞ்ஞானிகளும் ஈ.எஸ்.பி எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஷப்ஷன் என்கிறார்கள்.



சொல்லப்போனால் இயற்கையாகவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் உள்ளுணர்வு இருக்கிறது.

"நான் அப்பவே நெனச்சேன்...இப்படி நடக்கும்னு",
"இப்பத்தான் உன்னையப் பற்றி நெனச்சேன் ...ஆனால் நீயே இங்க வந்துட்டே...",
"எனக்கென்னமோ இது சரின்னுப்படவில்லை...",
"அவனைப்பார்த்தால் நல்லவன் போல தோணவில்லை...அவனிடம் ஏதோ தப்பு இருக்கு..",
"நான் அப்பவே சொன்னேன்ல இப்படி நடக்கும்னு..",
இப்படி சராசரியாக அனைவரும் கூறுவதுண்டு.
இப்படிக்க்கூறக் காராணம் ,அவர்களுக்குள் இருக்கும் உள்ளுணர்வின் அதீதசக்தியேக் காரணம்.

அதை அவர்கள் சரிவரப் பராமரிப்பதில்லை,அதை வளர்த்துக்கொள்வதும் இல்லை,..அதனாலேயே சிறுசிறுவிஷயங்களைப் பற்றிக் கூறுவதோடு அது நின்றுப் போய்விடுகிறது.


இந்த ஆற்றலானது ஒருசிலருக்குப் பிறப்பில் இருந்தே இருக்கக்கூடும்.
ஒருசிலருக்கு இந்த ஆற்றல் திடீரென வேலைசெய்யத் தொடங்கிவிடும்.
சிலருக்கு இது போதுமான வளர்ச்சி இல்லாமலே இருக்கக்கூடும்.


நம் உள்மனமானது உள்ளுணர்வுகள் மூலமாகத்தான் செய்திகளை சொல்லும் (intuition).
விடியல்காலையில் எழுந்ததும் முகம்,கை,கால்களை ஜில்லென்ற தண்ணீரில் கழுவிவிட்டு ,தரையில் ஓர் துணியினை விரித்து அதன் மேல்,5நிமிடம் அமைதியாக உட்கார்ந்துப்பாருங்கள்.

முதல்15நாட்களுக்கு உங்கள் மனம் அலைபாயும் கண்டதையும் சொல்லும்,கண்டதையும் எண்ணும்.
ஆனால் இதேப் பயிற்சி தினமும் கொடுக்கப்பட்டால்,ஒரே மாதத்தில் உங்களது உள்ளுணர்வு மெல்ல எழத்தொடங்கும்.
இதை தியானம் என்பர்.
உங்கள் மனம் மெல்லப் பேசத்தொடங்கும்...
உங்கள் மனம் என்ன என்ன சொல்கிறது என தெளிவாக கேளுங்கள்.
அது முதலில் என்ன சொல்கிறது என்றுப் பாருங்கள்.

அது முதலில் கூறும் வாக்கே, அறிவியலின்படி உள்ளுணர்வின்சேதி,

ஆன்மீகத்தின்படி தெய்வத்தின்  வாக்கு ஆகும்.

முதலில் தோன்றும் எண்ண அலைகளில்,பெறும்பாலான விஷயங்களும், சில முக்கியமான தவல்களும்,அடங்கிவிடும்.
 அதில் இறந்தகாலம் நிகழ்காலம்,எதிர்காலம் இவை அனைத்தைப்பற்றிய செய்திகளும் அடங்கும்.
மலையாளதேசத்து ப்ரஸன்னக் கலைப்படி,இறந்தகால செய்திகளை அறிவதை ஆதிப்ரஸன்னம்,அல்லது இறைவனிடம் உத்தரவு வாங்குதல் என்பர்.


மனம் சொல்லிக்கொண்டு இருக்கும் செய்தி சிறிதளவு துண்டிக்கப்பட்டுவிட்டாலும்,அதற்குப்பின் வரும் செய்திகள் எல்லாம் நமது சாதாரண எண்ண அலையில் வருவதாகிவிடும்.அதில் பெரிதாக ஏதும் அர்த்தம் இருக்காது,எதிர்கால கணிப்பும் இருக்காது..................



மனதின் ஆற்றல்........................தொடரும்