Wednesday 21 March 2012

கல்வெட்டு:9. (சிலாசாஸனம்:9)

கல்வெட்டு;-9
சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் ஆலயத்தின் வடிவமைப்புக்கள்.


1)சோட்டாணிக்கரை ஆலயத்திற்கு 4வாசல்கள் உள்ளன.


2)மேலக்காவு,கீழக்காவு என இரு முக்கியமான அம்பாள் சந்நிதானங்கள் அங்கு உள்ளன.
மேலக்காவில் பகவதிதேவியும்,
கீழக்காவில் பத்ரகாளியும் அருள்பாலிக்கின்றனர்.


3)மேலக்காவு பகவதிக்கோவிலில் மேற்குநோக்கி கொடிமரம் உள்ளது.பகவதியும் மேற்குதிசை நோக்கி காட்சித்தருகிறார்.அதன் உள்ளேயே,"சாஸ்தா"வின் சந்நிதானம், உள்ளது.


4)மேலக்காவு கோவிலின் வலப்பிரகாரத்தில்,தலவிருக்க்ஷம் உள்ளது.
இக்கோவிலின் தலவிருக்‌ஷம் "பவளமல்லி",.


5)மேலக்காவு பகவதிகோவிலின் பின்புறம்,"சிவன் சந்நிதானம் உள்ளது.
கிழக்கு திசையில் .வடகிழக்குமூலையில் "நாகராஜர்",சந்நிதானம் உள்ளது.


மேலக்காவில் பகவதி அம்மனை தரிசனம் செய்ததும்,
நாம் செல்லவேண்டிய இடம்,கீழக்காவு பத்ரகாளிக்கோவில்.


6)கீழக்காவு பத்ரகாளி கோவில்,மேலக்காவு கோவிலில் இருந்து பல படிக்கட்டுக்களை கடந்து செல்லும்வன்னம் அமைந்துள்ளது.


7)அந்தப்படிக்கட்டுக்களை கடக்கும் வழியில் ,வலப்புறம் "ஐயப்பன் சந்நிதானம்",,உள்ளது.
ஐயப்பன் சன்னிதானத்திற்குமுன்
"வெடிவழிபாடு",செய்யும் இடம் உள்ளது.


8)அந்தப்படிகட்டுக்கள் முடியும் இடத்தில்,கோவிலின் குளம் அங்கு உள்ளது.
அந்தக்குளத்தைச் சுற்றி வலப்புறமாக வலம் வந்தால் அங்கு "சங்குசக்ர",வடிவில் நாராயண தத்துவம் உள்ளது.


9)அதைக்கடந்ததும்,கீழக்காவு பத்ரகாளிக்கோவில் சன்னிதானம் வருகிறது.
கீழக்காவில் உள்ள பத்ரகாளி அக்காள் என்றும்,
மேலக்காவில் உள்ள பகவதியம்மன் அவளின் தங்கை என்றும் ஐதீகம் உள்ளது.


10)இந்தக் கீழக்காவு கோவிலில்தான்,
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தீயசக்திகளினால் ஆட்க்கொள்ளப்பட்டவர்களும்,அனைவரும் பரிகாரத்திற்கும்,தங்களைப்பிடித்த தீயசக்திகள் விலக பூஜைகள் செய்யவும் வருகின்றனர்.
இந்தக் கீழக்காவு சன்னிதானத்தில்தான் குருதிபூஜை இரவு 8.30மணிக்குமேல் நடைப்பெறும்.

கல்வெட்டு:8. (சிலாசாஸானம்:8)

கல்வெட்டு;-8


சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தின் தினசரி பூஜைகளும் ,பூஜைக்கான காலங்களும்.

அதிகாலை கோவில் நடைதிறப்பு:-காலை4மணி.


விஷேச காலங்கள் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில்:-காலை3.30மணி.


சிவ தரிசனம்:-
காலை 5.00மணி முதல் மதியம் 11.00மணி வரை.


சரஸ்வதி தரிசனம்:-காலை 5.30மணி.


காலை ஷீவேலி:-காலை 6.00மணிக்கு.


கீழக்காவுகுருதி நெய்வேத்தியம்:-காலை 7.30மணி.


பார்வதி(பந்தீரடி)தரிசனம்:-காலை 7.45மணிக்கு மேல்.


உச்சிகால பூஜை:-மதியம் 12.00மணி.


உச்ச ஷீவேலி:-மதியம் 12.10மணி.


சாயங்கால நடைதிறப்பு:-மாலை 4மணி.


தீப ஆரதனை:-மாலை 6.30மணி.


இரவு பூஜை;-மாலை7.30 மணிக்குமேல்.


இரவு ஷீவேலி:-மாலை8.00மணி.


கீழக்காவில் பெரிய குருதி:-இரவு8.00மணிக்கு மேல்.  


இத்திருத்தலத்தில் குருதிபூஜை மிகமுக்கியமான பூஜை ஆகும்.அதைக் கண்டு தரிசித்தாலே .,தீவினைகள் தோஷங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

கல்வெட்டு:7. (சிலாசாஸனம்:7)






சோட்டாணிக்கரை ப்ரஸன்ன மண்டபம்...
பிப்ரவரி மாதம் 6ம்தேதி,2011ம் ஆண்டு நடந்த ஓர் உண்மை சம்பவம்....




அன்னைபகவதி வாழும் மனிதர்களை மட்டும் இன்றி,
இறந்துப்போன மனிதர்களின் குறைகளைக்கூடப் போக்ககூடிய தெய்வம்.
அதனால்தான் அங்கு இறந்தவர்களின் ஆவிகளை சாந்தப்படுத்த "குருதிபூஜை",செய்யப்படுகிறது.
இறந்தவர்களின் கோபம்,குறைகள்,தவறான எண்ணங்கள்,ஆகியவை குருதிபூஜையில் சுத்தப்படுத்தப்பட்டு,தூய்மை ஆகிறது.
அவைகளால் ஆட்க்கொள்ளப்பட்ட மனிதர்களும்,அவற்றின் பிடியில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு வருகின்றனர்,.இவையாவும் என் அன்னை பகவதிக்கு மட்டுமே உள்ள தனித்துவம்.


அன்றையதினம்,ப்ரஸன்ன மண்டபத்தில்,
திரு,நமோநாராயணதம்புரான்,
திரு,அச்சப்பா,.,
திரு.குட்டப்பநாயர்..,
திரு.ஷீனிவசு தம்புரான்,..ஆகியோர் கூடியிருந்தனர்.
தமிழகத்தைச் சார்ந்த ,பாலமுரளிதியாகராஜன் என்பவரது,காலமான தாயார்,
"தெய்வத்திரு காமாட்சி அம்மாள்", அவர்களை ஸ்தூலப்பிரஸன்னத்தில் அழைத்துப்பேச பூஜைகள் செய்யப்பட்டன.


மண்டபக் கதவுகள் மூடப்பட்டு இருந்தன.
பகவதிஅம்மனிடம் முதலில் உத்தரவு கேட்கப்பட்டது.அவளது உத்தரவுக்குப் பின் மிகச்சிறியளவில் ஆன,
12 தாமிரப்பாத்திரங்களை கவிழ்த்துவைத்து அவற்றிற்கு தீபஆரதனை செய்தனர்.பூக்கள் போட்டு மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்தனர்.
(12பாத்திரங்கள்தான் ஆலயத்தின் குருதிபூஜையிலும் பிரதனமாக வைக்கப்படும்)
12ஆழ்வார்களின் வடிவமாக 12பாத்திரங்கள் வைக்கபடுவது ஐதீகம்.


பின் தர்ப்பைப்புல்களினால் ஒவ்வொருப் பாத்திரத்தையும் இணைத்தனர்..
(தர்ப்பைக்கு,குறிப்பிட்ட ஓர் ஆத்மாவின் ஷக்தியினை ஈர்க்கும்  தன்மை உண்டு என்பது அவர்களது ஐதீகம்)
12பாத்திரங்களுக்கும்,12எழுமிச்சம் பழங்களை வெட்டி மந்திரங்களைக் கூறிக் காவுக் கொடுத்தனர்.
(வருகின்ற ஆத்மாவிற்கு,பூலோகத்தில் உள்ள துஷ்டமந்திரவாதிகளினால் தொல்லை ஏற்படாமல் இருக்க,பூதகணங்களினால் தொல்லை ஏற்படாமல் இருக்க பழத்தை காவு கொடுப்பது ஐதீகம்).
பிறகு சிறிது பச்சரிசி வெல்லம் இவற்றை பகவதிஅம்மனுக்கு வைத்துப் படைத்தனர்.
(வருகின்ற ஆத்மாவிற்கு வழித்துணையாய் பகவதியை இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தப்படையல்)


அமைதியான அந்த மண்டபத்தில்,மெல்ல பச்சைக்கற்பூரத்தின் வாசனையும்,துளசியின் வாசனையும் வீசத்தொடங்கியது.
12பாத்திரங்களையும் இணைத்துக் கொண்டிருந்த தர்ப்பைப்புல்களும் தானாகவே ஒவ்வொன்றாய் விலகத்தொடங்கின.


பின்,"ஸ்தூலப்பிரஸனத்தை",
மலையாளதேசத்து மக்களுக்கு வகுத்துதந்த,
காலமான தெய்வத்திரு :"கதிர்கடவு காசிநாதர்தம்புரானுக்கு ",
அப்போது தீப ஆராதனை எடுப்பார்களாம்.
(காசிநாதர்தம்புரானின் ஆத்மா மறுஜென்மம் எடுத்திருப்பதாகாவும்,மறுஜென்மம் எடுத்துள்ள அவரது வாழ்க்கை மீண்டும் ஷக்திபெற வேண்டும் என்பதற்காக,
ஒவ்வொரு பிரஸன்னத்தின் போதும் மரியாதை நிமித்தமாக,தீபஆராதனை  எடுக்கப்படுவது வழக்கம்).
தம்புரான்களின் அழைப்பை ஏற்று அங்கு வந்திருந்த,
பாலமுரளிதியாகராஜன் அவர்களின்  ,தாயார்"காமட்சிஅம்மாளின்",ஆத்மாவின் அறிவுரையால்,அன்றையதினம்,காசிநாதர்தம்புரானுக்கு படையலோ தீபஆரதனையோ செய்யப்படவில்லை.
அதற்கான விளக்கத்தை கூடியிருந்த தம்புரான்கள் அறிந்து செயல்பட்டனர்.


சிறிது நேரத்தில்,"ஸ்தூலப்ரஸன்ன சோத்யம் உத்தரம்"(கேள்வி பதில்கள்),
ஒரு வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்டது.
தம்புரானின் கேள்விகளுக்கு,ஆத்மாவின் பதில்கள் 12பாத்திரங்களின் மூலமாக தானாகவே நகர்ந்து அக்‌ஷரங்களை நோக்கி சென்றன.
அன்றைய தினம் வந்த காமாட்சிஅம்மையார்,தெய்வஅனுகூலம் அதிகம் உள்ளவர் என்றும்,மனதைரியமும்,உள்ளவர் எனவும் தம்புரான்கள் கூறினர்.
காமட்சிஅம்மாள் தனது மகனுக்காகவும் மருமகளுக்காகவும் பேரன்களுக்காகவும் சந்தோஷமாக வந்து வாக்குச்சொல்லினார்.இன்னும் சொல்லப்போனால் அந்த அன்னை வந்தப்பின் அவரது மகனது வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பூத்துக்குலுங்கியது.
"நான் என் சந்ததியை மட்டும் அல்ல..,அனைத்துக் குழந்தைகளையும் என் பிள்ளையாகக் காப்பேன்.என் மகனது வழியில் வந்த எனது இளையப்பேரன் வடிவில் இனி என் எண்ணங்களை வெளிப்படுத்துவேன்..",
என்றும்,தனக்குப் பிடித்த விஷயங்களையும் கூறினார்.


"எங்கள் அனைவருக்கும் நீங்கள் கூற எண்ணும் அறிவுரை என்ன...?",
என ஓர் தம்புரான் கேட்டதற்கு,
"10யானைகள் மார்பின் மேல் ஏறி நின்றால்கூட,மனதைரியத்துடன் போராடவேண்டும்...மனதில்பட்டதை மறைக்காமல் கூறவேண்டும்..,இயன்றவரை இல்லாதவர்கு அன்னம் இடவேண்டும்...
சுயநலமற்ற வாழ்வே சொர்க்கத்திற்கு வழிகாட்டி...", எனக் கூறினார்.


காமாட்சிஅம்மாளின் குடும்பத்தினருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடக்கத்தில் சற்றே அதை அவர்கள் ஏற்க யோசித்தனர்.பின் அந்த அம்மையார் சொல்லியவை மெல்ல மெல்ல அவர்கள் இல்லத்தில் நடக்கத்தொடங்கின.அதன்பின்னரே
"தன் அன்னை காமாட்சி இன்றும்  தனது இல்லத்தில் தன்னுடனும் தன் பிள்ளைகளுடனும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள்..",என ,அவரது மகன்,பாலமுரளிதியாகராஜன் முழுமையாக ஏற்றுக்கொண்டார்....


ஸ்தூலப்பிரஸனம் பார்ப்பது தவறு.
இறந்தவர்களை அழைப்பது ,இந்துசாஸ்திரப்படி ஏற்கப்படாத ஒன்று.
இப்படி ஒருசிலர் கூறுகின்றனர்.


அவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி..,
இறந்தவர்களை அழைப்பது தவறு என்றால்..
""இறந்தவர்களுக்கு தர்ப்பணத்தின் போதும் திதிக்கொடுக்கும்போதும் ,அவர்களை அழைத்து பிண்டம் வைப்பது தவறு இல்லையா?
அமாவாசை அன்று இறந்தவர்களை 'கா கா ", எனக் கூவி அழைத்து பிண்டம் வைப்பது தவறுஇல்லையா?.
அப்போதும் மட்டும் இறந்தவர்களை அழைக்கலாமா? அது தவறு இல்லையா?"""....