Wednesday 14 March 2012

கல்வெட்டு:-2..(சிலாசாஸனம்:-ரண்டு)


சோட்டாணிக்கரை திருத்தலம்:-
கி.பி.,16ம் நூற்றாண்டு சரித்திரம்....
சான்றுகள்:-ஆதிபகவதி தேசம், என்ற பழமையான மலையாள நூலில் இருந்து...
ஆசிரியர்;-தெய்வத்திரு கதிர்கடவு மேல்சாந்தி காசிநாதர்நம்பூதிரி அவர்கள்.


(சோட்டாணிக்கரே அம்பலத்தினொடு
ஏ.டி.16 நூற்றாண்டு சரித்ரா....)
தெளிவு:-ப்ராசீன பகவதி தேசம்மென்ட  மலையாள க்ருதத்தில் இருந்நு...




கி.பி...நூற்றாண்டில் இந்தப்பகுதி விதவிதமான மரங்கள் நிறைந்த காடாக இருந்துள்ளது.
அக்காட்டில் ஆதிவாசிகள் வாழ்ந்துவந்தனர்.
அந்த ஆதிவாசிகளில் பெண் ஒருத்தி பகவதிஅம்மனை மானசீகமாக வழிப்பட்டுவந்தாள்.
அப்போது அங்கு கோவிகள் ஏதும் இல்லை.
எனவே அந்த ஆதிவாசிப்பெண் ,"பகவதி அம்மனை",
"அரூப ரூபமாக" வழிப்பட்டு வந்தாள்.
பகவதி அம்மனின் உருவத்தை அவள் தனக்குத்தானே மனதுக்குள் கற்பனை செய்து வழிப்பட்டாள்.


அப்பெண்,பகவதி அம்மனையும்...,
ஒரு ஆதிவாசிப்பெண்ணை போலவே சித்தரித்து வழிப்பட்டாள்.
அம்மனுக்கு மேல் ஆடை ஏதும் இல்லாததுப்போல் ,
இடுப்புக்கீழே பூக்களையும் இலைதழைகளையும் உடுத்தியதுப் போலவும்,
கற்பனை செய்தே வழிப்பட்டுவந்தாள்.


பகவதி அம்மனை அவள்,..
"அம்மே நாராயாணா...தேவி நாராயணா....",
என்றுக்கூறியே வழிப்பட்டாள்.
(இதுவே தற்போது அம்மனின் மூலமந்திரமாகும்).
அவளது உண்மையான பக்திக்கும் அன்பிற்கும் பகவதிஅம்மன் அடிமை ஆகினாள்.
ஒருநாள்....இரவு,
அந்த ஆதிவாசிப்பெண்ணிற்கு பகவதி அம்மன் "ஜோதி வடிவமாக",காட்சித்தந்தாள்.


இதானாலே அப்பகுதி,,"ஜோதியான கரை",
என ஆதிவாசிகளால் அழைக்கப்பட்டது.
இதுவே காலப்போக்கில் "ஜோதிக்கரை",
என்றாகி, நாளடைவில் "சோட்டாணிக்கரை",
என்றானதாக அந்நூலுல் இருந்து விளக்கம்
தரப்பட்டுள்ளது...

கல்வெட்டு;1- (சிலாசாஸனம்;ஒந்நு)


சோட்டாணிக்கரை
பகவதிஅம்மனைப் பற்றி விளக்கும் முன் ,
சக்திவடிவான அன்னைபராசக்தி வித்தியாசமாக காட்சிதரும்
இந்தியாவில் உள்ள ,எனக்கு தெரிந்த ஒரு சில திருத்தலங்கள்
பற்றி சிறு விளக்கம்....




அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அதில் சில....


அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, கொப்புடையம்மன் கோயில்.


வடக்கு நோக்கி சிவனை பூஜை செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம் தக்கோலம். அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.


கிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.


துர்க்கையம்மனுக்கென்று தனிக் கோயில், மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரத்தில் உள்ளது.


அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவமூர்த்தம், திருமால் பேறில் உள்ளது.


பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-திருவெண்காடு


திருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சன்னதிகள் எதிர் எதிராக அமைந்துள்ளன.


திருநாகேஸ்வரத்தில் உள்ள அம்பிகை திருமகளும், கலைமகளும் பணி செய்யும் அம்பிகையாகக் காட்சி தருகின்றனர்.


கொல்லூரில் மூகாம்பிகையே அதிகாலை மூன்றரை மணி முதல் 7 மணி வரை சோட்டானிக்கரை பகவதியாகக் காட்சி தந்தருளுவதாக ஐதிகம்.


மலையாளதேசத்தில் சோட்டாணிக்கரையில்
நாராயணனும் அம்பிகையும், ஒன்றே என்று உணர்த்தும்விதமாக ,
பகவதி கோலத்தில் ,மார்பினில் மாராப்பு ஏதும் இல்லாமல் காட்சித்
தருகிறாள்.


அமர்ந்த நிலையில் எட்டுத் திருக்கரங்களுடன் அமைந்த துர்க்கை அம்மனை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்.


குழந்தையுடன் அம்பிகை காட்சி தரும் தலங்கள்:


இசக்கியம்மன்-நெல்லை மாவட்டம், சிதம்பரபுரம் கிராமம்.


பிள்ளை இடுக்கி அம்மன் நாகைமாவட்டம், திருவெண்காடு.


திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அம்மன் பெரியநாயகி சன்னதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சன்னதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது.


பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளாள்.


திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நீலோத்பலாம்பாள் முருகனின் தலையை தடவிய கோலத்தில உள்ளாள். அன்னை கமலாம்பாள் கால் மேல் கால் போட்டு ராணி கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.


திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் அம்மன் பெரியநாயகி சம்பந்தரை இடுப்பில் தூக்கிய நிலையில் பிரகாரத்தில் உள்ளாள்.


காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி கோயிலில் லிங்கத்தின் பாணத்தில் அம்மனின் வடிவம் உள்ளது. இதை அர்த்தநாரீஸ்வர லிங்கம் என்கின்றனர்.


தஞ்சாவூர் திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்மன் சிவனை கட்டித்தழுவிய கோலத்தில் உள்ளார்.


பொதுவாக வலது கையில் அருள்பாலிக்கும் அம்மன் கேரளா சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் இடதுகையில் அருள்பாலிக்கிறாள்.


நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள கோகிலாம்பாள் இடது கையை ஊன்றி, வலது காலை குத்தவைத்தபடி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.


சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள காளி வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.


சிதம்பரம் தில்லை காளி கோயிலில் அம்மன் நான்கு முகத்துடன் பிரம்மசாமுண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.


கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.