Wednesday 28 March 2012

கல்வெட்டு:11. (சிலாசாஸனம்:11)

கல்வெட்டு;-11

கேரளாவில் உருவான ப்ரஸன்னம் என்னும் கலை இன்று மிகவும் பிரபல்யமாக கேரள மக்கள் மத்தியில் உள்ளது.

ப்ரஸன்னம் என்பதினை "தேவதாசித்தி",கலை என்று தமிழிலில் கூறுவார்கள்.
சோழிகளை சுழற்றிவிட்டு அவற்றின் திசையையும் ,விழுகும் ஐதீகத்தையும் வைத்து ஒருவரது ஜாதகத்தை அழகாக கணிக்கலாம்.
பகவதியின் அருள்வாக்கு,ப்ரஸன்னம் பார்க்கும் நம்பூதிரிகளின் காதுகளுக்கு எட்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். ப்ரஸன்னம் காணும் நம்பூதிரிகள்,
பகவதிதேவியின் வாக்கினை அப்படியே ,தன் உள்ளத்தால் அறிந்து அதை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி சம்பந்தப்பட்டவர்களுக்கு தருகின்றனர்.


அந்தக் காகிததில்,
"ஆதிப்ரஸன்னம்",
"இடைப்ரஸன்னம்",
"கடைப்ரஸன்னம்",
என மூன்று பாகங்களாகப் பிரித்து ,ஜாதககாரர்களின் இறந்தகால நிகழ்வுகளையும்,
நடக்கப்போகும் ஒருசில எதிர்கால நிகழ்வுகளையும் ,அவர்கள் ஜாகத்தில் உள்ளக் குறைகளையும் அதற்கான பரிகாரத்தையும் விரிவாக எழுதித் தருகின்றனர்.


ப்ரஸன்னம் பார்ப்பதற்கு ஒருசில விதிமுறைகள் உண்டு.

1)முதலில் பகவதியின் உத்தரவைக் கேட்டப்பின்னே ஒருவருக்கு ப்ரஸன்னம் பார்க்கப்படும்.

2)நியாயமான விஷயங்களுக்கு மட்டுமே ப்ரஸன்னம் பார்க்கப்படும்.

3)இயற்கைநியதிக்கு புறம்பான விஷயங்களுக்கு ப்ரஸன்னம் பார்க்கப்படமாட்டாது.

4)வாழ்க்கையின் முக்கியமான பிரச்சனைகளுக்கு மட்டுமே ப்ரஸன்னம் பார்க்கவேண்டும்.அற்பமான விஷயங்களுக்கெல்லாம் ப்ரஸன்னத்தைப் பார்ப்பது தெய்வக்குற்றமாகும்.

5)தன் குறைத்தீர்க்க ப்ரஸன்னம் கேட்டு வருபவர்களிடம், ஏழை ,பணக்காரன், தெரிந்தவன், தெரியாதவன், நண்பன் ,எதிரி,தனக்கு உதவுபவன், தனக்கு உதவாதவன்,எனப் பாகுபாடுகள் பார்க்கக் கூடாது.

6)முக்கியமாக ப்ரஸன்னத்தை ஒரு வியாபாரமாகவோ,ஏமாற்றுவேலையாகவோ செய்தால் குற்றமாகும்.

7)ப்ரஸன்னக் கலையைக் கற்றவர்கள்,அந்தக்கலையை தனக்கு அதிகம் ப்ரயோகப்படுத்தக்கூடாது.

8) ப்ரஸன்னக்கலை அறிந்தவருக்கு ஆணவம்,அகந்தை,இருக்கக்கூடாது.

9)அதிகாலையில் பார்க்கப்படும் ப்ரஸன்னம் மிக சக்திவாய்ந்தது.



ப்ரஸன்னத்தில்"ஸ்தூலப்ரஸன்னம்",என்ற ஒருவகை உண்டு.

ஒருவர் வீட்டி உள்ள ,பித்ருதோஷத்தை ,மூதாதையார் சாபத்தை,இறந்துப்போன அவர்களது வம்சாவழி மூதாதையரின் ஆத்மாவின் மூலம் தீர்வுகாணலாம்.
ஸ்தூலப்ரஸன்னத்தில் இறந்தவர்களது ஆத்மா பகவதிதேவியின் மூலமாக தங்களடு,குறைகளையோ,தங்கள் வம்சத்தில் உள்ள சாபத்தையோ,எடுத்துக்கூறுவார்கள்.அதற்கான பரிகாரத்தையும் அவர்களேக் கூறிவிடுவார்கள்.
இது ஆவிகளுடன் பேசுவதுப்போன்ற விஷயம் அல்ல.அந்தக்கலை வேறு, இது வேறு,.ஆவிகளுடன் பேசுபவர்கள்,ஆத்மாக்களை வரவழைத்து அதனுடன் நேரிடையாகப் பேசுவார்கள்.
ஸ்தூலப்ரஸன்னத்தில் ஆத்மாக்காள் ,தங்கள் கருத்துக்களை பகவதிதேவியிடம் கூறுவார்கள்.அதை ஆனைபகவதி ப்ரஸன்ன வடிவில் தருவாள்.


No comments:

Post a Comment